Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கலுக்கான தீர்த்தம்

In
Published: 04:44 GMT, Jun 6, 2017 |
0 Comments
1371
This post was written by : Surenth

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் உள்ள கண்ணகி அம்மனின் ‘வைகாசி விசாக பொங்கல்’ நிகழ்வை முன்னிட்டு நேற்று (திங்கட்கிழமை) சிலாவத்தை தீர்த்தக்கரைக் கடலில் இருந்து ‘தீர்த்தம்’ எடுத்துவரப்பட்டு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் அம்மன் மண்டபத்தில் விளக்கேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஏழாம் நாளான எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து பண்டமெடுக்கப்பட்டு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்படும். அதனைத்தொடர்ந்து, எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை பொங்கல் உற்சவம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வைகாசி பெளர்ணமியில் கடல் நீரில் விளக்கெரியும்’ வரலாற்றுப் பெருமை கொண்ட வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வருடாந்த பொங்கல் விழா பாக்குதண்டல் என்ற பாரம்பரிய நிகழ்வுடன் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Vatrappalai Amman 01 Vatrappalai Amman 02 Vatrappalai Amman 03 Vatrappalai Amman 04 Vatrappalai Amman 05 Vatrappalai Amman 06