Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் கடந்த காலங்களில் அழிவடைந்திருந்தன: ஜப்பான் தூதர்

In இலங்கை
Published: 09:41 GMT, Jun 6, 2017 |
0 Comments
1655
icon_com
This post was written by : Ravivarman

இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் கடந்த காலங்களில் பரியளவில் அழிவடைந்திருந்தன என இலங்கைக்கான ஜப்பானிய தூதர் கெனிச்சி சுகனுமா இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் மன்னார், பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்பப் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்புவிழாவின்போதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மிகவும் அழகான முறையில் அமைக்கப்பட்ட குறித்த பாடசாலையின் கட்டடத்திறப்பு விழாவில் நான் கலந்து கொள்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

மாணவர்களாகிய நீங்கள் எமது நாட்டு மக்களின் கலாசாரம் மற்றும் மக்களின் திறமைகள் குறித்து அறிந்து கொண்டிருப்பீர்கள். இலங்கையின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே தங்கியுள்ளது என்பதுடன், சிறுவர்களாகிய உங்களுக்கு கல்வி மிகவும் அவசியமானது.

இலவசக் கல்வியை நல்ல முறையில் கற்று உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்” என இலங்கைக்கான ஜப்பானிய தூதர் கெனிச்சி சுகனுமா மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg