Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

தெரேசா மே பதவி விலகுவதற்கான தருணம் வந்துவிட்டது: ஜெரமி கோர்பின்

In
Published: 05:49 GMT, Jun 9, 2017 |
0 Comments
1751
This post was written by : Elakkiya

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பதவி விலகும் நேரம் வந்துவிட்டதாக தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பிரித்தானிய பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க தவறிவிட்டது.

இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சி மீதான வாக்காளர்களின் நம்பிக்கை குறைந்து விட்டதாக சுட்டிக்காட்டியுள்ள ஜெரமி கோர்பின் தெரேசா மே பதவி விலகுவதற்கான தருணம் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ பிரதமர் தெரேசா மே தனது அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் பெரும்பான்மையை பெறுவதற்காகவும் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். ஆனாலும் கன்சர்வேடிவ் ஆசனங்களை இழந்துள்ளது, வாக்குகளை இழந்துள்ளது, ஆதரவாளர்களை இழந்துள்ளது, அத்துடன் ஆதரவாளர்களின் நம்பிக்கையையும் இழந்துள்ளது. இந்த நாட்டில் அனைவரினதும் உண்மையான பிரதிநிதித்துவமாக இருக்கும் அரசாங்கத்திற்கு இது வழிவகுக்கும் என்று நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.