Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெங்கட் பிரபுவின் குறும்படம் விரைவில்..

In சினிமா
Updated: 06:30 GMT, Jun 9, 2017 | Published: 06:28 GMT, Jun 9, 2017 |
0 Comments
1191
This post was written by : Priya
தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் படங்களை இயக்கும் ஒருவர் வெங்கட் பிரபு. தற்போது அவர்  `களவு’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் “ஆர்.கே.நகர்“ என்ற படத்தையும் தயாரித்து வருகின்றார்.

இந்நிலையில் அடுத்த முயற்சியாக குறும்படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.  இது குறித்து வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார்.

“சமீபத்தில் குறும்படம் எடுக்க வேண்டும் என்கிற தொற்று என்னை தாக்கிவிட்டது. ஆர்.டி.குமார் எழுதிய கதை மூலம் முக்கிய சமூக செய்தியை தெரிவிக்க இருக்கிறேன். அதுவும் 15 நிமிடத்திற்கு மிகாமல் படத்தை எடுக்க முடிவெடுத்துள்ளேன்.

முக்கிய கதாபாத்திரத்தில் சம்பத் நடிப்பதுடன், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்ரேயான் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, பிரவீன்.கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.

விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. உங்களது ஆதரவோடு, இதுவே எனது அடுத்த இன்னிங்ஸாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்“ என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg