Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தெரசோ மே அறிவிப்பு

In
Published: 10:56 GMT, Jun 9, 2017 |
0 Comments
1728
icon_com
This post was written by : Elakkiya

புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக பிரதமர் தெரேசா தெரிவித்துள்ளார்.

கொன்சவேற்றிவ் கட்சி பிரித்தானிய பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு அனுமதி கோரும் வகையில் மகாராணி எலிசபெத்தை சந்தித்து கலந்துரையாடிய தெரேசா மே அதன்பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே  மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, வட அயர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியான ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைத்து பிரெக்சிற் பேச்ச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் ஐந்து வருடங்களில் எந்தவொரு  சமூகத்தையோ அல்லது தனிநபரையோ புறந்தள்ளதாத வகையில் ஒரு தேசத்தை உருவாக்குவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.

ஆட்சியமைக்கத் தயாராகிறார்  தெரேசா மே

பிரித்தானிய பொதுத் தேர்தலில் கொன்சவேற்றிவ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் வகையில் பிரதமர் தெரேசா மே மகாராணியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய நேரப்படி 12.30 மணியளவில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான கொன்சவேற்றிவ் பெரும்பான்மையை இழந்துள்ள போதிலும் தொழிற் கட்சியை விடவும் கூடுதலாக தொகுதிகளை வென்றுள்ளது. இதனால் கொன்சவேற்றிவ் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.

650 தொகுதிகளுக்காக நடைபெற்ற பொதுத் தேர்தலில் 649 தொகுதிகளுக்கான முடிவுகள் இதுவரை வெளியாகியுள்ளன. முடிவுகளின் பிரகாரம் 318 இடங்களில் கொன்சவேற்றிவ் கட்சியும் 261 இடங்களில் தொழிற்கட்சியும் வெற்றிபெற்றுள்ளது.

எனினும், இரு கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. இவ்வாறிருக்க ஐனநாயக ஒன்றியக் கட்சி கொன்சவேற்றிவ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg