Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

மட்டு.சிவில் பிரஜைகள் குழுவிற்குப் புதிய தலைவர் தெரிவு!

In
Published: 12:01 GMT, Jun 9, 2017 |
0 Comments
1346
This post was written by : Ravivarman
SAM_8240

மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் குழு அமைப்பின் புதிய தலைவராக ரி.திருநாவுக்கரசு பதவி ஏற்றுள்ளதுடன், எதிர்காலத்தில் இக்குழுவின் செயற்பாடுகள் சிறப்பான சேவைகளையும் வழங்கும் என  சிவில் பிரஜைகள் குழுவின் முன்னைய தலைவர் வி. கமலதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் குழுவின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று (வியாழக்கிழமை) கல்லடியில் உள்ள பிரஜைகள் குழுக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய சிவில் பிரஜைகள் குழுவின் முன்னைய தலைவர் வி. கமலதாஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 2013 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் குழு அமைக்கப்பட்டு கடந்த 4 வருடங்களாக எந்தவித அரசியல் பின்னணியுமின்றி பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் மக்களுக்காகக் குரல் கொடுத்து சேவையாற்றி வந்துள்ளோம்.

இருந்தபோதும் நான் ஒரு அரசியல் கட்சியின் செயலாளராக செயற்படத் தொடங்கிய காரணத்தினால் இந்த சிவில் அமைப்பின் தலைவராகத் தொடர்ந்தும் இருப்பது பொருத்தமற்றது. எனவே இந்த தலைவர் பதவில் இருந்து விலகிக் கொள்கின்றேன்” என வி. கமலதாஸ் தெரிவித்தார்.

இதனையடுத்துப் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. இதில் புதிய தலைவராக ரி.திருநாவுக்கரசு, செயலாளராக எச்.எம்.அன்வர், பொருளாளராக ஏ.யோகிதர், உபதலைவராக ஏ.எல்.யுனைடீன், உபசெயலாளராக கிருபானந்தசிவம், மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஏ.எஸ்.எம்.அப்துல் சலாம் சதீக், கணக்காய்வாளராக கே.உதயகுமார், ஊடக இணைப்பாளராக க.சரவணன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.