Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

தெரேசா மேயின் புதிய அமைச்சரவை குறித்த இறுதி தீர்மானம் இன்று!

In
Published: 05:58 GMT, Jun 10, 2017 |
0 Comments
1474
This post was written by : Risha
ther

ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள தெரேசா மே இன்று (சனிக்கிழமை) புதிய அமைச்சரவை குறித்த விபரங்களை வெளியடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிலிப் ஹாமண்ட், ஆம்பர் ருத், பொரிஸ் ஜோன்சன், மைக்கல் ஃபெலோன் மற்றும் டேவிட் டேவிஸ் ஆகியோர் ஏற்கனவே இருந்த அதே பதவியில் நீடிக்கவுள்ளனர்.

எனினும், கொன்சவேற்றிவ் கட்சியின் எட்டு அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் தங்களது ஆசனங்களை இழந்த நிலையில், அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

பிரித்தானியாவில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 326 ஆசனங்களை பெற வேண்டிய நிலையில், தெரேசா மே தலைமையிலான கொன்சவேற்றிவ் கட்சியானது எட்டு ஆசனங்களை இழந்து பெரும்பான்மையை நிரூபிக்க தவறியது.
அதனை தொடர்ந்து, மகாராணி எலிசபெத்தை நேற்று சந்தித்த தெரேசா மே, ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதற்கு மகாராணியின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.