Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொன்சர்வேற்றிவ் கட்சியுடன் இணைவது தொடர்பில் சுமூகமான பேச்சுவார்த்தை

In
Updated: 05:36 GMT, Jun 11, 2017 | Published: 05:16 GMT, Jun 11, 2017 |
0 Comments
1631
icon_com
This post was written by : Sylviya
03

கொன்சர்வேற்றிவ் கட்சியுடன்  ஜனநாயக ஒன்றியக்கட்சியை இணைப்பது தொடர்பில் சுமூகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தை நேற்று (சனிக்கிழமை) பெல்பாஸ்ட்டில் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனநாயக ஒன்றியக் கட்சி, கொன்சர்வேற்றிவ் கட்சியுடன் சிறந்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவது தொடர்பில் அக்கறை செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட பிரித்தானிய பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான கொன்சர்வேற்றிவ் மற்றும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி ஆகியன பெரும்பான்மை வாக்குகளை பெறத் தவறின.

அதனைத் தொடர்ந்து பதவியில் இருக்கும் பிரதமர் தெரேசா மே புதிய ஆட்சியை உருவாக்குவது தொடர்பில் பிரித்தானிய மகாராணி எலிசபெத்துடன் கலந்தாலோசித்து அவருடைய அனுமதியைப் பெற்றார்.

அதன் பிரகாரம், பொதுத் தேர்தலில் 10 ஆசனங்களை வென்ற ஜனநாயக ஒன்றியக் கட்சியை கொன்சர்வேற்றிவ் கட்சியுடன் இணைப்பது சிறந்தது என பிரதமர் மே தீர்மானம் மேற்கொண்டார்.

எனினும், மே தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என பலர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg