Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

ஹற்றனில் கப் ரக வாகனம் விபத்து: மூவர் படுகாயம்

In இலங்கை
Published: 05:39 GMT, Jun 11, 2017 |
0 Comments
1345
This post was written by : Ravivarman

நோர்வூட், தியசிரிகம பகுதியில் கப்ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியில் சென்ற கப் ரக வாகனமே நேற்றையதினம் (சனிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தில் சாரதியான தந்தையுடன், தாயும் பிள்ளைகள் இருவரும் பயணித்துள்ளதாகவும், விபத்தில் தாயும் பிள்ளைகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னால் சென்ற வாகனத்தை அதிக வேகமாக முந்திச் செல்ல முற்பட்ட போது இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், விபத்தினால் வீடொன்று பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

DSC02845 DSC02848 DSC02857

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.