Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொன்சர்வேற்றிவ் – ஜனநாயக ஒன்றியக் கட்சிகளின் கூட்டிணைப்பிற்கு மக்கள் எதிர்ப்பு

In
Published: 07:01 GMT, Jun 11, 2017 |
0 Comments
1703
icon_com
This post was written by : Sylviya

பிரித்தானிய பிரதமரின் கொன்சர்வேற்றிவ் கட்சி மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஜனநாயக ஒன்றியக் கட்சி ஆகியவற்றை கூட்டிணைக்கும்  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று (சனிக்கிழமை) லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் நடத்தப்பட்டுள்ளது. கொன்சர்வேற்றிவ் கட்சியுடன் இணைவது தொடர்பில் எவ்வாறான சலுகைகள் எதிர்பார்க்கப்படும் என்பது குறித்து ஜனநாயக ஒன்றியக் கட்சி இதுவரை எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

எனினும் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுதல், கருக்கலைப்பு மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள் ஆகியன தொடர்பில் ஜனநாயக ஒன்றியக் கட்சியின் தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆகியன பெரும்பான்மை வாக்குகளை பெறத் தவறின.

பெரும்பான்மையைப் பெற கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு 8 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில், மொத்தம் 10 ஆசனங்களைப் பெற்ற  ஜனநாயக ஒன்றியக் கட்சியை இணைத்து அதன் மூலம் புதிய ஆட்சியை உருவாக்கும் முயற்சியில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மும்முரம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg