Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காளான் பக்கோடா

In
Published: 12:15 GMT, Jun 11, 2017 |
0 Comments
1264
icon_com
This post was written by : Anojkiyan
mus

தேவையான பொருட்கள்

காளான் – 200 கிராம்
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி தழை – சிறிதளவு
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காய்தூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
கடலை மாவு – 5 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

காளானை நன்றாக கழுவி நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து அதனுடன், அரிசி மாவு, கடலை மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான் மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சூப்பரான காளான் பக்கோடா ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg