Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கொழும்பு – ஹற்றன் வழித்தடத்தில் புதிய பேரூந்து சேவை ஆரம்பம்

In இலங்கை
Published: 04:22 GMT, Jun 12, 2017 |
0 Comments
1416
icon_com
This post was written by : Ravivarman
DSC04370

கொழும்பு – ஹற்றன் வழித்தடத்தில் மற்றுமொரு புதிய பேரூந்து சேவை ஹற்றன் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் புத்திக உடுகல சூரியவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஹற்றன் டிப்போவினால் கொள்வனவு செய்யப்பட்ட புதிய 10 பேரூந்துகளில் இரண்டாவது பேரூந்து நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.20 மணியளவில் புதிய சேவையாக கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்டது.

ஹற்றன் பிரதேச மக்களின் நலன் கருதி 10 பேரூந்துகள், 3 கோடி ரூபா நிதியினை செலுத்தி வாங்கப்பட்டுள்ளதுடன், மீதிப்பணத்தினை தவணை அடிப்படையில் வழங்கும் வகையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த சேவை, இரவு 7.20 ஹற்றனில் இருந்து புறப்பட்டு கொழும்பைச் சென்றடையும். பின்னர் கொழும்பில் இருந்து மீண்டும் ஹற்றன் நோக்கி அதிகாலை 3.20 க்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஹற்றன் டிப்போவின் அதிகாரி அநுர தொடந்தென்ன தெரிவித்துள்ளார்.

DSC04365 DSC04363 DSC04357 DSC04349 DSC04342

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg