Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆஸிக்கு பயணித்த சீன விமானம் அவசரமாக தரையிறக்கம்

In
Published: 06:10 GMT, Jun 12, 2017 |
0 Comments
1399
icon_com
This post was written by : Varshini

அவுஸ்ரேலியாவிலிருந்து சீனாவின் ஷங்காய் விமான நிலையத்திற்குச் சென்ற கிழக்கு சீன விமானசேவைக்குச் சொந்தமான விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக சிட்னி விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

எயார்பஸ் ஏ 330 என்ற குறித்த விமானம் நேற்றிரவு தனது பயணத்தை ஆரம்பித்த போது, விமானத்தினுள் எரியும் மணம் உணரப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் அற்ற வகையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக குறித்த விமானசேவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இயந்திரத்தில் பாரிய துளையொன்று ஏற்பட்டிருப்பதைப் போன்ற ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் நிலையில், இக் கோளாறு தொடர்பாக அவுஸ்ரேலியா போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg