Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

முட்டைக்கோஸ் சேண்ட்விச்

In
Published: 11:18 GMT, Jun 12, 2017 |
0 Comments
1175
This post was written by : Shailu
Sandwhich

தேவையான பொருட்கள்  

முட்டைக்கோஸ் – 1/4 கிலோ
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
சில்லி சோஸ் – 2 டீஸ்பூன்
வெண்ணெய் – சிறிதளவு
தக்காளி சாஸ் – 4 டீஸ்பூன்
கோதுமை பிரட் துண்டுகள் – 8
வெங்காயம் – 1
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முட்டைக்கோஸை மிகப் பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நீரில் கழுவியபின்பு இதனோடு உப்பு, எலுமிச்சை சாறு கலந்து இட்லி தட்டுகளில் வைத்து 8 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், தக்காளி சாஸ், சீரகத்தூள், சில்லி சாஸ் போட்டு சிறிது வெண்ணெய் சேர்த்துக் கிளறவும்.

ஒரு பிரட் துண்டின் நடுவில் இந்த கோஸ் கலவையை வைத்து அதன் மேல் மற்றொரு பிரட்டால் மூடி டோஸ்ட் செய்யவும். தற்போது முட்டைக்கோஸ் சேண்ட்விச் தயார்!

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.