Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வல்லரசாக மாறுவதை விட விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும்: விஜய்

In சினிமா
Updated: 08:13 GMT, Jun 13, 2017 | Published: 08:13 GMT, Jun 13, 2017 |
1 Comment
1271
This post was written by : Shailu

விவசாயிகளின் நிலைக் குறித்து இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் விவசாயிகள் குறித்து உரையாற்றினார். அதில், “அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகளின் நிலை மோசமாகி விட்டது. அவர்கள் இலவச அரிசிக்காக கடையில் காத்து நிற்கிறார்கள்.

நமக்கு 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய் விட்டது. நாம் நன்றாக இருக்கிறோம். ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை.

இப்போது ஆரோக்கியம் இல்லாத உணவுதான் கிடைக்கிறது. இன்று விவசாயிகளை கவனிக்காவிட்டால் அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாத நிலை ஏற்படும்.

நாம் வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும். விவசாயிகள் பிரச்சினைக்கு அவசியமாக மட்டுமல்ல, அவசரமாகவும் தீர்வு காணப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg
  1. rajkumar periyathamby