Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

முஸ்லிம் சமூகத்திற்காக அனைவரும் ஒன்றுபடும் காலம் கனிந்துள்ளது: றிஷாட்

In
Published: 10:21 GMT, Jun 13, 2017 |
0 Comments
2189
This post was written by : Ravivarman
Rishad - 011

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த அனைத்து இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் நேற்றையதினம் (திங்கட்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த அரசின் காலத்தைப் போன்று அல்லது அதைவிட மோசமாக, முஸ்லிம் சமூகம் இப்போது பாதிக்கப்பட்டு வருகின்றது. தினமும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கிலான செயற்பாடுகள் நடந்த வண்ணமே உள்ளன.

ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் முஸ்லிம் சமூகத்தின் வேதனைகளையும் பாதிப்புகளையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் எடுத்துரைத்துள்ளோம்.

எனினும் நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரியவில்லை. தொடர்ந்தும் எங்களைச் சீண்டும் வகையில் இனவாதிகள் தமது மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் இயக்கங்கள், சமூகம் சார்ந்த நிறுவனங்கள் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அனைவரும் கட்சி, அரசியல் மற்றும் கொள்கை வேறுபாடுகள் ஆகியவற்றுக்கப்பால் ஒருமித்த குரலுடனும் ஒருமித்த கருத்துடனும் ஒன்றுபட்டுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்துக்காக, அந்த சமூகத்தின் நன்மைக்காக எந்த தியாகத்தையும் நாங்கள் செய்வதற்கு தயாராக உள்ளோம்” என அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

Rishad - 022

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)