Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் நட்பு நாடுகள் மீது விரைவில் பொருளாதார தடை: அமெரிக்கா

In
Updated: 07:37 GMT, Jun 14, 2017 | Published: 03:20 GMT, Jun 14, 2017 |
0 Comments
1462
icon_com
This post was written by : Risha
rex

வடகொரியாவுடன் சட்டவிரோத வணிக செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க செனட் சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வெளியுறவுக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அவ்வாறான நாடுகளுக்கு எதிராக தடைகளை அமுல்படுத்துவது தொடர்பில் வெள்ளை மாளிகை விரைவில் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனை திட்டங்களை மேற்கொண்டுவரும் வடகொரியா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே இந்த புதிய தடை குறித்து அவதானிக்கப்பட்டு வருகிறது.

வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன், அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்புகளை தாக்கும் வகையிலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg