Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மனுஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு 70 மில்லியன் இழப்பீடு

In
Updated: 07:09 GMT, Jun 14, 2017 | Published: 04:46 GMT, Jun 14, 2017 |
0 Comments
1200
icon_com
This post was written by : Risha
manus

பப்புவா நியூ கினியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் 70 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த 2012 முதல் 2016ஆம் ஆண்டுவரை பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஆனால் மேற்படி குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த அவுஸ்ரேலிய அரசாங்கம், இந்த இழப்பீடு வழங்கும் தீர்மானம் தமது விவேகமான தீர்மானம் என தெரிவித்துள்ளது.

அவுஸ்ரேலியாவிற்கு புகலிடம் கோரி சென்றவர்கள் பப்புவா நியூ கினியிலுள்ள நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.

படகு மூலம் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல் நடவடிக்கையினால் அவுஸ்ரேலிய கடற்கரைப் பகுதிகளில் இடம்பெறும் ஆபத்தான பயணங்களை தடுக்கும் வகையிலேயே குடியேற்றவாசிகள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டதாக அவுஸ்ரேலியா குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அவுஸ்ரேலியாவின் இந்த கொள்கை உள்நாட்டில் மாத்திரமன்றி ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தரப்பினாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg