Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

கடலை வடை

In
Updated: 10:53 GMT, Jun 14, 2017 | Published: 10:51 GMT, Jun 14, 2017 |
0 Comments
1229
This post was written by : Elakkiya
kambu_2547339f

தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு – ஒரு சுண்டு
பெருஞ்சீரகம் – 1 முதல் 2 மேசைக்கரண்டி
கடுகு – அரைத் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
நசுக்கிய பூடு – 2 பற்கள்
நசுக்கிய இஞ்சி – சிறிய துண்டு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை 
பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு, அதில் மிதமான சூட்டில் இருக்கும் வெந்நீரை ஊற்றி, சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். (கடலைப் பருப்பைவிட தண்ணீர் கூடுதலாக இருக்க வேண்டும்). வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைப் சிறிது சிறிதாக வெட்டி வைக்கவும்.

கடலைப்பருப்பு ஊறியதும் தண்ணீரில்லாமல் வடித்து பேப்பரில் போட்டு 30 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் கடலைப்பருப்பை மூன்றாகப் பிரித்து மூன்று பாத்திரங்களில் தனித்தனியாக எடுத்து வைக்கவும். (முதலாவதில் குறைவான அளவாகவும், மற்ற இரண்டிலும் முதலாவதின் இரு மடங்காவும் இருக்கும்படி அளந்து எடுக்கவும்).

இரண்டாவது பாத்திரத்திலுள்ள கடலைப்பருப்பைக் கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மூன்றாவது பாத்திரத்தில் இருக்கும் கடலைப்பருப்பை நன்றாக அரைக்கவும். அரைக்கும் போது சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும். ஒரே பாத்திரத்தில் அனைத்து கடலைப்பருப்பையும் சேர்த்து அதனுடன் நசுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் சோம்பு சேர்க்கவும். அத்துடன் வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை வடைகளாகத் தட்டி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
சுவையான கடலை வடை தயார்!!

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.