Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

முடி உதிர்வை தடுக்கும் நெல்லிக்காய் தைலம்

In
Updated: 11:46 GMT, Jun 14, 2017 | Published: 11:26 GMT, Jun 14, 2017 |
0 Comments
1196
This post was written by : Elakkiya
201706141443360422_amla-hair-oil-for-hair-growth_SECVPF

பெரும்பாலானவர்களுக்கு முடி கொட்டுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. முடி அதிகமாக கொட்டுவது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. முடி உதிரும் பிரச்சினைக்கு நெல்லிக்காய் தைலம் சிறந்த தீர்வாக அமைகின்றது.

பச்சை நெல்லிக்காய், துளசி இலை, வித்து நீக்கிய கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து கிரைண்டரில் நன்றாக அரையுங்கள். இந்த விழுதை மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டித் தொங்கவிடுங்கள்.

அதிலிருந்து துளி துளியாக சாறு சொட்டும். இந்த சாற்றினை சேமித்து, சாற்றின் அளவில் மூன்று மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி உதிர்வது நின்று அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

பனி காலங்களில், தலையில் பொடுகுத் தொல்லை ஏற்படும். இதற்கு தீர்வாக நெல்லிக்காய் பேஸ்ட்டை பயன்படுத்தலாம்.

வெந்தயத்தூள் ஒரு டீஸ்பூன், கடுக்காய் தூள் அரை டீஸ்பூன், கடலை மா மூன்று டீஸ்பூன் ஆகிய மூன்றையும் கலக்கும் அளவுக்கு எலுமிச்சைச்சாறு, பச்சை நெல்லிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை தலைக்கு தேய்த்து 10 நிமிடம் கழித்து தண்ணீர் ஊற்றி அலசுங்கள்.

வெந்தயம், கடுக்காய், கடலை மா மூன்றும் தலையை சுத்தப்படுத்தி பொடுகை நீக்கும். எலுமிச்சைச்சாறு தலையில் உள்ள அரிப்பைப் போக்கும். நெல்லிக்காய் முடியின் நுனி பிளவடைவதை நீக்கி முடியை கருகருவென வளரச்செய்யும்.

 

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.