Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் அமர வேண்டும்: அதாஉல்லா

In
Updated: 13:01 GMT, Jun 14, 2017 | Published: 13:00 GMT, Jun 14, 2017 |
0 Comments
1161
This post was written by : Shailu
ADJF - 04

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகள் தொடருமாயின், அரசாங்கத்துடன் இணைந்துள்ள 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிரணி ஆசனங்களில் அமர வேண்டுமென, தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அதாஉல்லா, பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாயின் அரசாங்கத்துக்கு ஒரு காலக்கெடுவினை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு வழங்கப்பட்ட காலக்கெடுவினுள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வராத பட்சத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், சபையின் எதிரணி ஆசனங்களில் அமர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பொலிஸார் கட்டுப்படுத்த வேண்டும் எனக்கூறிய அவர், ஆட்சியாளர்கள் தப்பித்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADJF - 07

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.