Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நானுஓயாவில் பதற்றம் தணிந்தது: சிறுமின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைப்பு!(3ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 13:30 GMT, Jun 15, 2017 | Published: 03:33 GMT, Jun 15, 2017 |
0 Comments
6328
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

நானுஓயா பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்த சிறுமியின் சடலம் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினரின் பாதுகாப்புடன் மதியம் 2.45 மணியளவில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா நகரின் பாதசாரி கடவையில், பாதை கடக்க முற்பட்ட 6 வயது சிறுமி மீது, கனரக வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே பரிதாபமான நிலையில் இச்சிறுமி உயிரிழந்திருந்தார்.

எனினும் இப்பிரதேசத்தில் பதற்றநிலை சற்றுத் தணிந்துள்ளபோதும் பொதுப் போக்குவரத்து சீராகவில்லை எனவும் தொடா்ந்தும் பொலிஸாரினால் வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நானுஓயாவில் பதற்றம்: படையினர் குவிப்பு (2ஆம் இணைப்பு)

ஹட்டன் – நானுஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா நகரின் பாதசாரி கடவையில் பாதையை கடக்க முற்பட்ட 6 வயது சிறுமியை பாரவூர்தி மோதியதில் குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ரதல்ல கீழ்பிரிவு பகுதியை சேர்ந்த ஆக்காஷா தேவ்மிணி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரவூர்திக்கு தீ வைத்த பிரதேச மக்கள், பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் கலவரம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தினால் ஹட்டன் நுவரெலியா ஊடான பொதுப் போக்குவரத்து பல மணி நேரம் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

nanuoya accident - tense situation (7) nanuoya accident - tense situation (2) nanuoya accident - tense situation (6) nanuoya accident - tense situation (5) nanuoya accident - tense situation (4) vlcsnap-2017-06-15-10h27m54s183 nanuoya accident - tense situation (1)

விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

ஹட்டன் – நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்று வந்த பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி இன்று (வியாழக்கிழமை) பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாரவூர்தி ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை அடுத்து ஆத்திரமடைந்த மக்கள் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg