காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடலில் இறங்கி போராட்டம்!
தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (வியாழக்கிழமை) திருகோணமலையில் கடலில் இறங்கி வித்தியாசமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தி கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு என பல்வேறு மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் அனைவரும் திருகோணமலையில் ஒன்றுதிரண்டுள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் நடைபெறும் போராட்டம் நூறு நாட்களையும் கடந்து தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், முல்லைத்தீவில் நடைபெற்றுவரும் போராட்டம் நாளைய தினத்துடன் நூறு நாளை எட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.