Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

மன்னார் நகரம் வழமைபோல் இயங்குகின்றது

In இலங்கை
Published: 08:43 GMT, Jun 16, 2017 |
0 Comments
1443
This post was written by : Risha

வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக வடக்கின் பல பாகங்களிலும் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தின் செயற்பாடுகள் வழமை போன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் கதவடைப்பினால் பாாியளவிலான பாதிப்பு இல்லை என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மாகாணசபை உறுப்பினர்கள் சிலரினால், வடக்கு முதல்வருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து, வடக்கு மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கடையடைப்பை மேற்கொள்ளுமாறு, தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.

குறுகிய முன்னறிவிப்பை பொறுத்துக்கொண்டு, இனத்தின் நலன்கருதி எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன், அனைவரும் இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது.

அந்தவகையில் வடமாகாணத்தில் ஓரிரு மாவட்டங்களில் சி.வி.க்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனால், மன்னாரில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் வழமைபோல் செயற்பட்டதுடன், வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு செயற்பாடுகள் வழமையான வகையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.