Updated: 12:35 GMT, Jun 16, 2017 | Published: 09:08 GMT, Jun 16, 2017 |
0 Comments
18535
மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் தெரிவுசெய்யப்படலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.
மன்னார் மாவட்டத்தின் ஆயராக அருட்பணி ஆற்றிவந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை சுகயீனம் காரணமாக ஆயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதனை அடுத்து மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை மன்னார் மறை மாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலராக திருச்சபை நியமித்திருந்தது.
இருந்தபோதிலும், மன்னார் மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர் தொடர்பான தகவல்கள் எதனையும் இலங்கை திருச்சபையோ அல்லது மன்னார் மறை மாவட்ட அலுவலகமோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை திருச்சபையினைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அருட்தந்தை ஒருவர் இந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.