Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

மட்டக்களப்பில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு ஆரம்பம்

In இலங்கை
Updated: 10:24 GMT, Jun 16, 2017 | Published: 10:15 GMT, Jun 16, 2017 |
0 Comments
1104
This post was written by : Vithushagan
unnamed (18)

மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர் தலைமையில் ஆரம்பமானது.

போரும் போருக்குப் பின்னருமான காலத்தில் தொட்டுணரா அல்லது அருவப் பண்பாட்டு மரபுகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும் என்ற தொனிப் பொருளில் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஆரம்பமான இந்த மாநாடு மூன்று நாட்களை கொண்டதாக நாளை வரை நடைபெறவுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரி.ஜெயசிங்கம், பேராசிரியர் எஸ்.மௌனகுரு, கலை கலாசார பீட பீடாதிபதி கே.ராஜேந்திரம், சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜே.ஞானதாஸ், கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் என்.செல்வக்குமரன், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 unnamed (10)

unnamed (17)

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.