Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு

In இலங்கை
Published: 04:49 GMT, Jun 17, 2017 |
0 Comments
1470
icon_com
This post was written by : Risha

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உனாமெக்குலே சந்தித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் நூறு நாட்களை கடந்து தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில் இன்று (சனிக்கிழமை) மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு வலியுறுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு பகல், வெயில் மழை பாராது மூன்று மாதங்களுக்கு மேலாக தொலைத்த தமது உறவுகளுக்காக மக்கள் இவ்வாறு வீதியில் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

UN2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg