Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலை திறந்துவைப்பு: சி.வி. பங்கேற்கவில்லை

In இலங்கை
Updated: 11:40 GMT, Jun 17, 2017 | Published: 11:40 GMT, Jun 17, 2017 |
0 Comments
1347
icon_com
This post was written by : Risha
thi

இலங்கையின் வடக்கு, கிழக்கில் உலக தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் சிலைகள் திறந்து வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் 15ஆவது திருக்குறல் மாநாட்டின் முதல்நாள் நிகழ்வில் முதன்மை விருந்தினராக வட. மாகாண முதலமைச்சர் கலந்துக்கொள்ளவிருந்த போதிலும், வடக்கில் நிலவும் சர்ச்சை நிலையையடுத்து அவர் பங்குகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிகழ்வின்போது மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி மகாவித்தியாலய சந்தியிலிருந்து திருவள்ளுவரின் உருவப்படம் ஊர்வலமாக கரைச்சி பிரதேச சபை வளாகம் வரை எடுத்துச்செல்லப்பட்டு அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகைத்தந்த உலக தமிழ் சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

thi2 thi1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg