Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

வடக்கு- கிழக்கின் நிலைமைகள் குறித்து கூடுதல் கவனம்: ஐ.நா

In இலங்கை
Published: 12:49 GMT, Jun 17, 2017 |
0 Comments
1234
This post was written by : Risha
UN11

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான நிலைமைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவது அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உனாமெக்குலே தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் செய்த அவர், கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “நேற்று ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியிருந்தேன். அதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிப் பிரச்சினை, அபிவிருத்தி என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ஐ.நா. இலங்கையின் இடைக்கால நீதி முறைமை மட்டுமின்றி அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தும்.

அதேவேளை, தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் வடக்கு, கிழக்கில் நிலவும் வறட்சி நிலைகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது” என்றார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.