Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

போர்த்துக்கல் காட்டுத்தீ: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு (இரண்டாம் இணைப்பு)

In
Updated: 12:02 GMT, Jun 18, 2017 | Published: 04:01 GMT, Jun 18, 2017 |
0 Comments
1257
icon_com
This post was written by : Anojkiyan

போர்த்துக்கலில் ஏற்பட்டுள்ள பாரியளவிலான காட்டுத்தீ காரணமாக குறைந்தபட்சம் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீதியில் கார்கள் மற்றும் வாகனங்களில் சென்றுகொண்டிருந்த பெருமளவானோர் தப்பியோட முயற்சித்த போதே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் 59 பேர் காயமடைந்துள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.வெகுவாக பரவும் காட்டுத்தீயினை கட்டுப்படுத்துவதற்காக 600 தீயணைப்பு வீரர்கள் முயற்சிசெய்து வருகின்ற போதிலும் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ஆறு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் மேலும் இருவரை காணவில்லை என்றும் கூறப்படுகின்றது.

தீயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பகுதிகளை தீயணைப்பு வீரர்களால் நெருங்க முடியவில்லை என்றும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய போர்த்துக்கலில் காட்டுத்தீ: 19 பேர் உயிரிழப்பு

மத்திய போர்த்துக்கலில் பரவியுள்ள காட்டுத்தீயினால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த காட்டுத்தீயினால் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆறு தீயணைப்பு வீரர்கள் உட்பட, இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விவகாரங்களுக்கான மாநில செயலாளர் ஜோர்ஜ் கோம்ஸ், ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சோசா ஆகியோர் காட்டுத்தீ ஏற்பட்ட தளத்தை பார்வையிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கலில் பல தசாப்தங்களுக்கு பிறகு அரங்கேறிய கொடூர காட்டுத்தீ இதுவென கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg