மன்னாரில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்
சர்வதேச யோகா தின நிகழ்வுகள் முதன்முறையாக மன்னார் மாவட்டத்தில் இம்முறை இடம்பெற்றுள்ளது.
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த யோகா தின நிகழ்வுகளில், மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன் தலைமையில் இடம்பெற்ற குறித்த யோகா தின நிகழ்வில், இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜன், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.