Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள சர்வதேச யோகா தினம்

In
Updated: 08:59 GMT, Jun 18, 2017 | Published: 07:26 GMT, Jun 18, 2017 |
0 Comments
1206
This post was written by : Ravivarman
international yoga day 5656

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச யோகா தினம் எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழக செயலாளர் எல். தீபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் காலை 6.30 மணிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனின் ‪பங்குபற்றுதலுடன் மேற்படி யோகா பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாக தீபாகரன் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யோகா கலையின் சிறப்பை உணர்த்தும் முகமாகவும், மட்டக்களப்பில் யோகா கலையை பிரபல்யப்படுத்தும் நோக்குடனும், சர்வதேச யோகா தினத்திற்கு முதல் நாளன்று மட்டக்களப்பில் பெரிய அளவில் யோகா பயிற்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் உட்பட பல அதிகாரிகளும் மற்றும் மாணவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்” என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)