Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிப்பு: சிரிய இராணுவம்

In உலகம்
Published: 06:02 GMT, Jun 19, 2017 |
0 Comments
1524
icon_com
This post was written by : Sylviya

சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கடந்த ஓரிரு நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். இன் பிடியில் இருந்த ரக்கா நகரின் பெருமளவான பகுதிகள் சிரிய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரக்கா நகரில் சிரிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து சுமார் 14 கிராமங்கள் வெற்றிகரமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சிரியாவில் உள்ள டெய்ர் எஸ் – ஸோர் (Deir ez-Zor) பகுதியை கைப்பற்றுவது சிரிய படையினரின் அடுத்த இலக்காக உள்ளதாகவும், அது தொடர்பான முயற்சிகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உரையாற்றிய சிரிய இராணுவத்தினரின் கட்டளைத் தளபதி, “பயங்கரவாதிகளை முற்றாக அழித்து அவர்களிடம் உள்ள நகரங்களை மீளக் கைப்பற்றுவதே எமது முக்கிய நோக்கு. அதனடிப்படையில், எமது அடுத்தகட்ட நகர்வு டெய்ர் எஸ் – ஸோர் நகரைக் கைப்பற்றுவதே. இதில் நாம் நிச்சயம் வெற்றி காண்போம்” என தெரிவித்தார்.

டெய்ர் எஸ் – ஸோர் பகுதிக்குள் சிரிய இராணுவத்தினர் நுழையவுள்ளனர் எனவும் அவர்கள் ஏறக்குறைய 125 கிலோ மீற்றர்கள் தொலைவிலேயே உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg