Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பொலிஸாரின் தலையீட்டை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது (2ஆம் இணைப்பு)

In
Published: 06:10 GMT, Jun 19, 2017 |
0 Comments
2761
This post was written by : Varshini

வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதல், பொலிஸாரின் தலையீட்டை அடுத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அத்தோடு, ஆர்ப்பாட்டக்காரர்களும் கலைந்து சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள வடக்கு மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை மீள இணைத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியே வவுனியாவில் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு வந்த இளைஞர் குழுவொன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கைகலப்பும் ஏற்பட்டது.

இதனையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் அவ்விடத்தில் குவிக்கப்பட்ட பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு, இரு தரப்பினரிடமும் கலந்துரையாடி அவர்களை கலைந்துசெல்லுமாறும் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதோடு, பிரதேசத்தில் நீடித்த பதற்றமும் தணிந்தது.

sathi (2) sathi (4) sathi (1) sathi (5)

அமைச்சா் சத்தியலிங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸார் குவிப்பு

ஊழல் மோசடி குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கு ஆதரவாக வவுனியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் குறித்த ஆர்ப்பாட்டத்தில், இளைஞர் குழுவொன்று திடீரென பிரவேசித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கலைந்துசெல்லுமாறு கோரி கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அப்பிரதேசத்தில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு வருகை தந்த இளைஞர்கள் தம்மை பொது அமைப்புக்களின் ஒன்றியத்தார் என அடையாளப்படுத்தியதோடு, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர். அத்தோடு, விசாரணையில் சத்தியலிங்கம் பங்கேற்க வேண்டும் எனவும் கோரி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வடக்கு அமைச்சர்கள் விவகாரம் வடக்கு மாகாண சபையில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், வடக்கு முதல்வருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

vavuniya protest - clash (1) vavuniya protest - clash (3) vavuniya protest - clash (4)

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)