Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சட்டமன்ற அமர்வில் இருந்து ஆளுங்கட்சி உறுப்பினர் வெளிநடப்பு!

In
Updated: 06:26 GMT, Jun 19, 2017 | Published: 06:15 GMT, Jun 19, 2017 |
0 Comments
1237
This post was written by : Surenth
Thanga Tamil Selvan

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடியபோது, சட்டமன்ற அமர்வில் இருந்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்துள்ளார்.

ஆண்டிபட்டி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிடும் வகையில் அவர் வெளிநடப்பு செய்துள்ளார்.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.தங்கதமிழிச்செல்வன், கடந்த நாட்களில் எடப்பாடி பழனிச்சாமி அணியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயற்பட்டார்.

இதேவேளை, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டமன்ற அமர்வுகளில் இருந்து வெளியேறுவது இதுவே முதற் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)