Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முடியாது: பன்னீர்செல்வம் சூளுரை

In இந்தியா
Published: 07:41 GMT, Jun 19, 2017 |
0 Comments
1348
This post was written by : Surenth
Panneerselvam

தற்போது தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்றும் அதற்கு மக்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் சார்பில் பாளையங்கோட்டையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர், தற்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.வின் ஆட்சியை கவிழ்த்து முதலமைச்சராக வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என்றும், அது அவரால் முடியாது என்றும் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டினார்.

மேலும், கட்சியை எம்.ஜி.ஆர். ஆரம்பித்து வைத்த போது அவருடன் இருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இன்றும் தமது பக்கம் இருக்கின்றனர் எனவும் அ.தி.மு.க. இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தன்னுடன் அவர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் போன்ற எந்த தேர்தலை நடத்தினாலும் புரட்சித்தலைவி அம்மா அணி வெற்றி பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் சூளுரைத்துள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.