Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையில் இடம் வேண்டும்!

In
Updated: 12:46 GMT, Jun 19, 2017 | Published: 07:44 GMT, Jun 19, 2017 |
0 Comments
1395
This post was written by : Sylviya
08

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் இடம்பிடிக்க வேண்டும் என பிரித்தானியாவின் ஐந்து பிரதான வர்த்தக நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வ பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே குறித்த கோரிக்கையை இந் நிறுவனங்கள் முன்வைத்துள்ளன.

ஒற்றைச் சந்தையில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரித்தானிய வணிக செயலாளர் கிரெக் கிளார்க்கிற்கு (Greg Clark) அனுப்பப்பட்ட கடிதத்திலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரெக்சிற் பேச்சுவார்த்தையின் போது பொருளாதாரம் தொடர்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய வர்த்தக சபை (British Chambers of Commerce), பிரித்தானிய தொழில் கூட்டமைப்பு (Confederation of British Industry), ஈ.ஈ.எப் (EEF), சிறிய நிறுவனங்களின் கூட்டமைப்பு (Federation of Small Businesses) மற்றும் இயக்குநர்கள் நிறுவனம் (Institute of Directors) ஆகிய ஐந்து பாரிய வர்த்தக நிறுவனங்களே குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.