Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

கிரென்பெல் டவர் தீ விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!

In
Published: 08:07 GMT, Jun 19, 2017 |
0 Comments
1333
This post was written by : Sylviya
09

மேற்கு லண்டன் கிரென்பெல் டவர் தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மெட்ரோ பொலிற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட குறித்த விபத்தில், 58 பேர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், குறித்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் மொத்தம் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரியளவில் உயிர் சேதத்தையும் சொத்து தேசத்தையும் ஏற்படுத்திய மேற்படி விபத்தில் சிக்கியவர்கள், உயிர்பிழைத்திருப்பதற்கு வாய்ப்பில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் குறைந்தது 64 பேர் காயமடைந்துள்ள நிலையில், 18 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் உள்ளதாகவும் அவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் ஆத்ம சாந்தி கருதி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 - 1
09 - 2

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)