Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

மன்னாரில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு!

In
Published: 08:21 GMT, Jun 19, 2017 |
0 Comments
1070
This post was written by : Ravivarman
DSC_0014

ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் ஸ்தாபக தலைவர் கே.பத்மநாபா, போராளிகள் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களின் 27 ஆம் ஆண்டு நினைவு தினமான தியாகிகள் தினம் மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) மன்னாரில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன் போது வட.மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஜேசுதாசன், மன்னார் நகர சபை முன்னாள் உறுப்பினர் மெரினஸ் பெரேரா மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், உயிர் நீத்த ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் ஸ்தாபக தலைவர் கே.பத்மநாபா மற்றும் போராளிகள், உயிர்நீத்த பொதுமக்கள் ஆகியோரை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

DSC_0022 DSC_0011 DSC_0005 DSC_0004 DSC_0002

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)