Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் குறித்து டேவிட் டேவிஸ் கருத்து

In
Updated: 12:53 GMT, Jun 19, 2017 | Published: 10:10 GMT, Jun 19, 2017 |
0 Comments
1294
This post was written by : Sylviya
11

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்படும் என பிரெக்சிற் விடயங்களைக் கையாளும் அமைச்சர் டேவிட் டேவிஸ் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.

பிரஸ்சல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தின் கட்டிடத்தில் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக அமையும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் வலுவானதாக அமையும் எனவும் டேவிட் டேவிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தை தொடர்பான முக்கிய விடயங்கள் மற்றும் கால அட்டவணை தொடர்பில் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் தொடர்பான பேச்சாளர் மிஷெல் பார்னியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி விலகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.