Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

பணக் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: முதலமைச்சர் மீது வழக்கு

In இந்தியா
Updated: 12:42 GMT, Jun 19, 2017 | Published: 09:43 GMT, Jun 19, 2017 |
0 Comments
1274
This post was written by : Surenth
Edappadi Palinichamy

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது இடம்பெற்றதாக கூறப்படும் பணக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குறித்த தேர்தலின் போது, சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரியே பணக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெருநகர குற்றவியல் நடுவரிடம் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.