Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கீதாவின் மனுவை விசாரிக்கும் ஐவரடங்கிய நீதவான் குழு

In இலங்கை
Updated: 11:27 GMT, Jun 19, 2017 | Published: 09:43 GMT, Jun 19, 2017 |
0 Comments
1145
This post was written by : Vithushagan

கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை எதிர்த்து அவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரிக்க ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையில் இந்த நீதவான் குழு குறித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்த உள்ளது.

குறித்த மேன்முறையீட்டு மனுவின் பிரதிவாதிகள் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாகவே ஐவரடங்கிய நீதவான் குழு பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளது.

கீதா குமாரசிங்க தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவின் விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg