Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

விமலின் விசாரணை ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

In இலங்கை
Published: 10:13 GMT, Jun 19, 2017 |
0 Comments
1305
This post was written by : Ravivarman
thumb_thumb_large_Wimal_Weerawansa___released_on_bail

அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அடுத்த கட்ட வழக்கு விசாரணைகளை ஒக்டோபர் மாதம் 23ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதவான் தீர்மானித்துள்ளார்.

அத்துடன் அன்றைய தினம் மேற்படி வழக்கு விசாரணை அறிக்கை தொடர்பாக சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.