Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

லிபியாவில் நான்கு குடியேற்றவாசிகளின் சடலங்கள் கண்டெடுப்பு

In ஐரோப்பா
Published: 10:30 GMT, Jun 19, 2017 |
0 Comments
1511
This post was written by : Sylviya

ஐரோப்பாவுக்கு செல்ல முற்பட்ட நான்கு சட்டவிரோத குடியேற்றவாசிகளின் சடலங்கள் லிபியாவின் தஜூரா (Tajura) நகருக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த குடியேற்றவாசிகளின் சடலங்களை சர்வதேச செம்பிறைச் சங்கம் கண்டெடுத்துள்ளதாகவும் இது போன்ற மீட்பு நடவடிக்கைகள் கடந்த ஒரு சில தினங்களாக தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த மீட்புப் படையினர் ஒருவர், “நேற்றும் மூன்று சடலங்கள் கரையொதுங்கியிருந்தன. இன்று நான்கு சடலங்களை நாம் கண்டெடுத்துள்ளோம். அதனால் கடந்த இரு தினங்களில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 7 ஆக அதிகரித்துள்ளது” என தெரிவித்தார்.

லிபியா மற்றும் இத்தாலி ஊடாக ஐரோப்பா செல்லும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகவும் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.