Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் மோடியை சந்திக்கிறார்

In இந்தியா
Updated: 13:23 GMT, Jun 19, 2017 | Published: 12:17 GMT, Jun 19, 2017 |
0 Comments
1431
This post was written by : Surenth
Ramnath Kovind

பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடியை நாளை (செவ்வாய்க்கிழமை) சந்திக்கவுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) அந்த கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா டில்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது குறித்த சந்திப்பு தொடர்பில் அறிவித்துள்ளார். இதன்படி, பிரதமர் நரேந்திர மோடியை ராம்நாத் நாளை மாலை 5 மணிக்கு  சந்திப்பார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வெற்றி குறித்தும் மேலும் சில கட்சிகளை இணைத்துக் கொள்வது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.