Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

மாவட்ட அபிவிருத்திக் குழு பதவியிலிருந்து விலகும் ஆறுமுகன் தொண்டமான்

In இலங்கை
Published: 14:00 GMT, Jun 19, 2017 |
0 Comments
1391
This post was written by : Vithushagan
images_903b26ee95f5eb07f01536cee1b6a234

நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் பதவியிலிருந்து  விலகுவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் தொடர்பில் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை எழுத்து மூலம் அறிவித்திருப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹட்டன் குப்பை விவகாரத்தில் மக்களுக்கு சேவை செய்ய முன்வராத நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைமை பதவி தமக்குத் தேவையில்லை என்று ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.