Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க கொள்கை ரீதியான தீர்மானம் தேவை: ஜனாதிபதி

In இலங்கை
Published: 17:29 GMT, Jun 19, 2017 |
0 Comments
1110
This post was written by : Vithushagan

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு வருதல் மற்றும் ஆசிரிய இடமாற்றங்களுக்காக சுயாதீனமான முறைமையை அமுல்படுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மாகாண முதலமைச்சர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற 33 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் அனைத்து மாகாண முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அரசாங்க அமைச்சர்களின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முறைமை தொடர்பிலும் ஜனாதிபதி வினவினார்.

நிச்சயிக்கப்பட்டவாறு ஒவ்வோர் ஆண்டும் விண்ணப்பம் கோரி, பரீட்சைகளை நடத்தி புதியவர்களை நிர்வாக சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.