Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெங்கு ஒழிப்புக்கு புதிய திட்டம்!

In இலங்கை
Published: 17:35 GMT, Jun 19, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Vithushagan
denge

டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கு தேவையான புதிய பக்றீரியா வகையொன்றை அவுஸ்திரேலியாவிலிருந்து எடுத்துவருவது தொடர்பில் சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் இந்த பக்றீரியாவை பயன்படுத்துவது தொடர்பில் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

இந்த பக்றீரியாவினால் டெங்கு நுளம்புகளின் விஷத்தன்மையை குறைப்பதற்கு முடியுமாகவுள்ளதாகவும், தற்பொழுது இந்த பக்றீரியா வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய மொனஷ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த பரிசோதனை வெற்றியளித்தால், இலங்கையில் டெங்கு ஒழிப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடலை முன்னெடுக்க அடுத்த மாதம் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg