Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பி.எஸ்.எல்.வி சி-38 ரொக்கெட்டின் நேரக்கணிப்பு ஆரம்பமாகியது!

In இந்தியா
Published: 08:30 GMT, Jun 22, 2017 |
0 Comments
1273
icon_com
This post was written by : Shailu
PSLV C-38 rocket

பி.எஸ்.எல்.வி சி-38 ரொக்கெட் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் அதற்கான நேரக்கணிப்பு இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ரொக்கெட் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி-38 ராக்கெட், நாளை காலை 9.30 மணிக்கு 31 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 28 மணி நேர கணிப்பு இன்று காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

பூமியை கண்காணிப்பது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குறித்த ரொக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கிரண்குமார் கூறுகையில்,

“நாளை ஏவப்படவுள்ள செயற்கைகோள்கள் நகர்புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிக்காக விண்ணல் ஏவப்படவுள்ளது. மங்கல்யான் செயற்கைகோள் கடந்த 19ஆம் திகதியோடு 1000 நாட்கள் கடந்து வெற்றிகரமாக செயற்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg