Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவூதி உள்ளிட்ட 4 நாடுகளின் நிபந்தனையை ஏற்கமுடியாது: துருக்கி

In உலகம்
Published: 10:14 GMT, Jun 25, 2017 |
0 Comments
2297
This post was written by : Sylviya

கட்டாரில் உள்ள துருக்கி இராணுவ தளத்தை மூடவேண்டும் என சவூதி உள்ளிட்ட நான்கு நாடுகள் விதித்த நிபந்தனை அவமதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

தொழுகையின் பொருட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பள்ளிவாசலுக்குச் சென்றிருந்த போது அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “கட்டார் மீதான தடைகளை அகற்றும் பொருட்டு சவூதி உள்ளிட்ட நான்கு நாடுகளால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க முடியாது என கட்டார் தெரிவித்துள்ளது. கட்டாரின் தீர்மானத்தை நாம் மதிக்கின்றோம். ஒரு நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் அமைந்த எந்தவொரு செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனாலேயே கட்டார் மறுப்பு தெரிவித்துள்ளது என்பதை நாம் புரிந்து கொண்டோம்.

சவூதி அரேபியாவில் எமது இராணுவத் தளம் ஒன்றை அமைக்க வேண்டும் என அந்நாடு விரும்பும் பட்சத்தில் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க நாம் தயார். இவ்விடயம் தொடர்பில் நான் சவூதி மன்னரிடம் ஏற்கனவே கூறியிருந்தேன். எனினும் இதுவரை எமக்கு எந்த பதிலும் சவூதியிடம் இருந்து கிடைக்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் எதுவித கருத்தையும் தெரிவிக்காது கட்டாரில் உள்ள எமது இராணுவத் தளம் மூடப்பட வேண்டும் என நிபந்தனை விதித்திருப்பது சற்றும் ஏற்க முடியாதது” என தெரிவித்தார்.

சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரேன் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் என்பன கட்டார் மீதான உறவுகளை முடக்கிக் கொண்டன.

எனினும், குறித்த உறவுகள் மேன்மேலும் தொடர வேண்டுமானால் 13 நிபந்தனைகளுக்கு கட்டார் உடன்பட வேண்டும் என குறித்த நாடுகள் தெரிவித்தன.

அந்த 13 நிபந்தனைகளில் அல் ஜசீரா தொலைக்காட்சி மூடப்பட வேண்டும், ஈரானுடனான உறவுகள் குறைத்துக் கொள்ளப்பட வேண்டும் மற்றும் கட்டாரில் உள்ள துருக்கி இராணுவத் தளம் மூடப்பட வேண்டும் என்பன உள்ளடங்கும். எனினும், குறித்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என கட்டார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg